அவர்களுடன் இவர்கள் உறவு கொள்வார்கள்... - கேலி செய்தவர்களுக்கு சின்மயி பதிலடி...!
நயன்தாராவை கேலி செய்தவர்களுக்கு பாடகி சின்மயி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
‘கனெக்ட்’ படம்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது ‘கனெக்ட்’ படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்காக நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார்.
தியேட்டரில் படம் பார்க்க வந்த நடிகை நயன்தாராவை ரசிகர்கள் திடீரென சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த நயன்தாரா புன்னகைத்தும், அவர்களுக்கு கையசைத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கேலி செய்தவர்களுக்கு சின்மயி பதிலடி
இவர்கள் இருவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த சிலர், நயன்தாரா பற்றி கொச்சைப்படுத்தி தவறாக கமெண்ட் செய்தனர்.
இந்த கமெண்ட்ஸ்களைப் பார்த்த பிரபல பாடகி சின்மயி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த மாதிரி கமெண்ட் செய்த ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்தார்களா? இல்லையா? என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த ஆண்களுக்கு எல்லாம் மகள்கள் இருந்தால் என்ன நடக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். பல தாய்மார்கள் தங்கள் மகள், கணவர் மற்றும் மகன் முன் கூட துப்பட்டா அணியவே விரும்புவார். ஆனால் ஆண்கள் சிலர் தங்கள் சொந்த மகள் சகோதரியாக இருந்தால் கூட அவர்களுடன் உறவு கொள்வார்கள் என்பதை பார்த்து வருகிறோம்’ என்று கடுமையாக கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது நயன்தாராவிற்கு ஆதரவாக சின்மயி குரல் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.