‘ஜென்டில் மேன்-2’ படத்தில் நடிக்கும் நயன்தாரா..ஆனா ஒரு சின்ன ட்விஸ்டு!!

gentleman gentleman2 nayantharachakkravarthy shankarmovieupdate
By Swetha Subash Mar 23, 2022 08:44 AM GMT
Report

1993-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ‘ஜென்டில் மேன்’.  தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் இயக்குனர் ஷங்கரின் முதல் படமும் இதுவே.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ அர்ஜூனுடன், நடிகர்கள் மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்பட பலர் நடித்திருந்தனர்.

‘ஜென்டில் மேன்-2’ படத்தில் நடிக்கும் நயன்தாரா..ஆனா ஒரு சின்ன ட்விஸ்டு!! | Nayanthara Chakkravarthy To Act In Gentle Man 2

‘ஜென்டில் மேன்’ வெளியாகி சுமார் 30 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகள் பல வருடங்களாக உலா வந்தவண்ணம் இருந்தன.

படத்தின் 2- பாகத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் படம் தயாராகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கபோகும் கதாநாயகி குறித்து அனைவரிடமும் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி படத்தில் நயன்தாரா நடிப்பார் என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் வட்டமடிக்க தொடங்கின.

‘ஜென்டில் மேன்-2’ படத்தில் நடிக்கும் நயன்தாரா..ஆனா ஒரு சின்ன ட்விஸ்டு!! | Nayanthara Chakkravarthy To Act In Gentle Man 2

இதனால் ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் மிதந்தனர். எனினும் ஜென்டில்மேன்-2 படத்தின் கதாநாயகி யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஜென்டில்மேன்-2 படத்தில் நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு பதில் நயன்தாரா சக்கரவர்த்தி என்ற புதுமுகம் ஒப்பந்தமாகிவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது படக்குழு.