நயன் திருமணத்தை இயக்கப்போகும் இயக்குனர்-ஒளிபரப்பும் OTT தளம்? பின்றாய்ங்க!

Sumathi
in பிரபலங்கள்Report this article
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்
இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் மிக பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.
நெட்ப்ளிக்ஸ்
பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த திருமண வீடியோவை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க, கௌதம் மேனன் இயக்கத்தில்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின்
திருமணம் நடக்கப்போகுதாம்.