விரைவில் நயன்தாராவின் திருமண வீடியோ - Netflix சொன்ன குட் நியூஸ்..!
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ குறித்த அதிகாரப்பூர்வ டீசரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக உள்ள நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திரை பிரபலங்கள் முன்னிலையில், பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நயன் விக்கி திருமணம்
இவர்களின் திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யாமல், ஆவணப் படமாக எடுத்து நெட்பிளிக்ஸிற்கு விற்றுள்ளார் நயன்தாரா. பாலிவுட்டில் ஆலியா பட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது திருமணத்தை இப்படி ஓடிடி நிறுவனங்களிடம் விற்ற நிலையில் .
தென்னிந்தியாவில் முதன் முறையாக தனது திருமணத்தை ஆவணப்படமாக எடுத்து நெட்பிளிக்ஸில் வெளியிட்டனர் நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி திருமண வீடியோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது டீசர் ஒன்றுடன் வெளியாகி இருக்கிறது.
Nayanthara Beyond the Fairytale
அதற்கு Nayanthara Beyond the Fairytale என்கிற டைட்டிலை வைத்து தற்போது நெட்பிளிக்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்களில் டீசரை வெளியிட்டுள்ளது.
Cue the malems cos we're ready to dance in excitement?
— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG
அந்த வீடியோவில் நடிகை நயன்தாரா மணப்பெண் கோலத்தில் வெட்கப்படும் காட்சிகளும், புன்னகைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
நடிப்பது மட்டும் தான் எனக்குத் தெரியும், ஆனால், இத்தனை ரசிகர்கள் என் மீது காட்டும் அளவுக் கடந்த அன்பிற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவனும் தனது நயன்தாரா குறித்து கொஞ்சலாக பேசியுள்ளார் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.