நயன்தாராவின் போயஸ் கார்டன் வீடு எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப் போவீங்க
நயன்தாரா தன் காதலரான விக்னேஷ் சிவனுடன் எழும்பூரில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அமைதியான இடத்தில் வசிக்க விரும்பிய நயன்தாரா, வீடு தேடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தான் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு குறித்து அறிந்து அங்கு சென்று பார்த்தார்.
அபார்ட்மென்ட்டும், ஏரியாவும் பிடித்துப் போக, நான் இனி போயஸ் கார்டனில் வசிக்கப் போகிறேன் என்று முடிவு செய்தார்.
இதையடுத்து ஒன்றல்ல இரண்டு அபார்ட்மென்ட்டுகளை வாங்கியிருக்கிறார். இரண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டவை.
போயஸ் கார்டன்னா காசை கொட்டிக் கொடுக்கணுமே, நயன்தாரா எத்தனை கோடியை இறக்கினாரோ என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் அபார்ட்மென்ட் ஒன்றுக்கு அவர் ரூ. 18 கோடி கொடுத்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அறிந்த ரசிகர்கள் வியந்தாலும், இதெல்லாம் தலைவிக்கு ஜுஜுபி காசு என்கிறார்கள். கெரியரை பொறுத்தவரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
அந்த படத்தில் விஜய் சேதுபதியும், சமந்தாவும் இருக்கிறார்கள்.
முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா நடித்த அண்ணாத்த படம் நவம்பர் 4ம் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்றது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan