ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா? - வெளியான ஹாட் நியூஸ்!

nayanthara sharukhan hindiflim
By Irumporai Jun 25, 2021 11:21 AM GMT
Report

தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று மெகா ஹிட் படங்களை இயக்கிய ஸ்டார் இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து  ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகசெய்திகள் வெளியானது.

பின்னர் அந்த படத்திலிருந்து அட்லீ வெளியேறிவிட்டார், ஷாருக்கானுக்கு கதை பிடிக்கவில்லை, என கூறப்பட்ட  நிலையில் தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் இயக்குனர் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் போன்ற ஹிட்டான படங்களில் நயன்தாரா நடித்திருப்பதாலும்.

அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் நயன்தாராவை முன்னணி நடிகையாக மாற்றியதால் ஷாருக்கான் ஜோடியாக அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்வார் என சினிமா வட்டாரத்தில் பேசி கொள்கின்றனர்.



ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தபின் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.