என்னை அப்படி கூப்பிடாதீங்க; விக்கிக்காக மட்டும் அதை பண்ணேன் - நயன்தாரா ஓபன்டாக்
நடிகை நயன்தாரா அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
நடிகை நயன்தாரா
ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அடுத்தடுத்து கொடுத்த ஹிட் படங்களால் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இரண்டு காதல் தோல்விகளால் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார்.
அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைக்கும் வண்ணம் திரையுலகில் தனது தரத்தை உயர்த்தினார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்.
லேடி சூப்பர் ஸ்டார்?
தொடர்ந்து, வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். அதன்பின் சினிமா விட்டு ஒதுங்குவார் என்ற sஎய்திகள் பரவிய நிலையில் பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். மேலும், பிஸினஸிலும் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படமான அன்னபூரணி என்ற படத்தில் நடித்துள்ளார். அது வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில், இதனையொட்டி அவர் சமீபத்திய பேட்டியில்,
"நான் சம்பாதித்திருக்கும் பணம், புகழ் என அனைத்துமே ரசிகர்கள் கொடுத்தது தான். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். எல்லோரும் திட்டுவார்கள். விக்னேஷ் சிவனுக்காக மட்டும் தான் சமையல் செய்ய கற்றுக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.