விக்கியை கல்யாணம் பண்ணியே இருக்க கூடாது - நயன்தாரா ஓபன் டாக்
திருமணமே செய்திருக்கக்கூடாது என நயன்தாரா பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
நயன்-விக்கி
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து நயன் பேசியிருக்கும் விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
"நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் அவ்வப்போது நினைத்ததுண்டு. இப்போதும் நான் குற்ற உணர்ச்சியில்தான் இருக்கிறேன். ஏனெனில் அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான்.
குற்ற உணர்ச்சி
அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென்று தனியாக ஒரு பெயர் இருந்திருக்கும். இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் அவருக்கென ஒரு அடையாளம் இருந்திருக்கும். விக்னேஷ் சிவன் ரொம்பவே நல்ல மனிதர்.
அவரை போல் ஒருவர் இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டால் அது எனக்கு தெரியவில்லை. ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ் விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது. தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
ஆடம்பரத்தையோ, வெற்றியையோ நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.