நயன்தாராவுக்கு வியாதியா? - வெளியான தகவல்? - ஷாக்கான ரசிகர்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகியுள்ளது.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவின் நடிப்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், இப்படத்தில் நடிகை நயன்தாரா எலும்பும், தோலுமாக இருப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இதனையடுத்து, ரசிகர்கள், நயன்தாராவை பார்த்தாலே பாவமாக உள்ளது. மிகவும் ஒல்லிக்குச்சியாகி, வயதானவர் போல இருக்கிறார். அவருக்கு நல்லா சோறு போடுங்க விக்னேஷ் சிவன் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நயன்தாரா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போவதை பார்த்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். உணவுக் கட்டுப்பாடால் ஒல்லியானாரா? அல்லது உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா? எப்படி இருந்த என் செல்லம்.. இப்படி மாறிவிட்டதே என்று ரசிகர்கள் கவலையில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வரும் ஜூன் மாதம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.