நடிக்க மறுத்த நடிகை நயன்தாரா - உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குநர்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan N. Lingusamy
By Thahir Dec 02, 2022 09:09 AM GMT
Report

நடிகை நயன்தாரா குறித்து இயக்குநர் லிங்குசாமி ஒரு தகவலை மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிக்க மறுத்த நயன்தாரா 

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பையா இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இவருக்கும் சூப்பராக கெமிஸ்டிரி வொர்க்அவுட் ஆனதால் சிறுத்தை மற்றும் தோழா உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து ஜோடியாக நடித்தனர்.

Nayantara refused to act

பையா திரைப்படத்தில் நடிக்க தமன்னாவிற்கு முன் முதலில் நயன்தாராவை நடிக்க வைக்க லிங்குசாமி நாடியுள்ளார். அப்போது நடிகை நயன்தாரா அந்த பட வாய்ப்பை தட்டி கழித்துவிட்டாராம்.

பையா திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்தது ஏன்? என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். நயன்தாராவுக்கு பையா படத்தில் நடிக்க விருப்பம் இருந்தாலும், அவர் கேட்ட சம்பளத்தை அப்போது கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Nayantara refused to act

பிசியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன்

சம்பள பிரச்சனையால் தான் நடிகை நயன்தாரா பையாவில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க மறுத்தது என்பதையும் அவர் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டு சினிமா வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.

இதே போன்று விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து திரைப்படம் எடுக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.