திருப்பதியில் செருப்பு அணிந்து போட்டோஷூட் : நயன்-விக்னேஷ் சிவனுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் செருப்பு அணிந்து வந்த நயன்தாரா - போட்டோ ஷூட் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான்
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி ,தரிசனம் செய்ய பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட வெளிநாட்டு பிரதமர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் யார் வந்தாலும்
வைபவ உற்சவ மண்டபம் வரை மட்டுமே காலணிகள் அணிந்து செல்ல அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்பிறகு நான்கு மாட வீதி மற்றும் வாகன மண்டபம்,
காலணிகள் அணியக்கூடாது
கோவில் முன்புறம் உள்ள பகுதி என்பதால் சுவாமி வீதி உலா வரக் கூடிய இந்த பகுதிகளில் காலணிகள் அணியக்கூடாது என்று தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
அதன்படி பக்தர்களும் முக்கிய பிரமுகர்களும் காலணிகள் இல்லாமல் வருவது வழக்கம். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு முதல் பயணமாக
ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்பதற்காக தங்களது குடும்ப உறுப்பினர்கள் என 26 பேருடன் திருமலைக்கு வந்தார்.
இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்களை ஒருபுறம் நிற்க வைத்து கயிறு கட்டி ஒரு வரிசையில் நிற்க வைத்தனர்.
அதன்பிறகு நயன்தாரா தம்பதியினர் ஏழுமலையான் கோவிலில் இருந்து தெப்பகுளம் அருகே நின்றபடி போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர்.
அப்போது நயன்தாரா ஏழுமலையான் கோவிலில் இருந்து தெப்பக்குளம் மற்றும் காருக்கு செல்லும் வரை காலணி அணிந்து இருந்தார்.
முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரையும் காலனிகள் இல்லாமல் அனுமதிக்கும் தேவஸ்தான நிர்வாகம் நயன்தாரா தம்பதியினர் காலணி அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமலையின் புனிதத்தன்மை காக்கும் விதமாக திருமலையில் திரைப்படங்கள், குறும்படம், போட்டோ ஷூட் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவஸ்தானம் இதனை தடுக்க வேண்டிய தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தது குறித்து பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேநிலை இனி வரும் காலத்தில் தொடர்ந்தாள் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் கோவில் முன்பு போட்டோஷூட் மற்றும் திரைப்படங்கள், குறும்படங்கள் எடுக்கக்கூடிய சுற்றுலாத்தலமாக மாறிவிடும் எனகுற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து மேற்கொண்டு தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்களா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.