ஷாருக் கானுக்கு அடிச்ச Luck...முதன் முறையாக "அந்த" கொள்கையை விட்டு கொடுத்த நயன்
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்கிறார் என்ற சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜவான்
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் பட்சத்திலும், தற்போது வரை பாலிவுட்டில் அறிமுகமாகாமல் இருந்து வந்தார். ஆனால், பாலிவுட் சென்ற அட்லீ தன்னுடனே நயன்தாராவையும், அனிருத்தையும் ஹிந்தி பட உலகில் அழைத்து சென்றுவிட்டார்.

ஷாருக் கான் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் "ஜவான்". பான் இந்தியன் படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இறங்கி வந்தாரா நயன்?
இந்நிலையில் தான் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. அண்மையில் படத்தில் இரண்டாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரமாண்டமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல இடங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் நயன்தாராவும் கலந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில காலமாகவே தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழ் படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட நயன்தாரா கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்குள்ளானதாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான், ஜவான் படத்திற்கு அவர் ப்ரோமோஷனில் பங்கெடுத்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இது கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil