ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்
வேலூரில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் விதமாக அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வேலை இழந்து வருமானமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள ஆந்திர எல்லையோரப் பகுதியான தொண்டன்துளசி கிராமத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர்.
மேலும்அப்பகுதி மக்களுக்கு முகக்கவசம் கொடுத்து கொரானா நோய்குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.