சகோதரன் ஆட்சி .. மீண்டும் பாகிஸ்தான் வரும் நவாஸ் ஷெரீப் : வருகையின் முக்கிய நோக்கம் என்ன?
லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் நவாஸ்ஷெரிப் பாகிஸ்தான் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிபரும் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்புகு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப்
ஆனால் , அவரது உடல் நிலை காரணமாக 2019 - ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பிறகு நாடு திரும்பவில்லை .
தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது, தற்போது பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
மீண்டும் தாயகம் வருகை
தனது சகோதரருக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்கியுள்ளார்.இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில்
தனது கட்சியை வழி நடத்த வசதியாக லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.