பாகிஸ்தான் ஒரு விபசார விடுதி'- ஆப்கான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சால் சர்ச்சை!

Afghanistan Nawaz Sharif Mohib Read
By Irumporai Jul 25, 2021 02:33 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசியதற்காக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கியதால் அந்நாட்டு நீதிமன்றத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், தனது உடல்நிலை மோசமாக இருப்பதால் 2019ம் முதல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி உள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசரான ஹம்துல்லா மொஹிப்,லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார்.

நவாஸ்ஷெரிப்பினை சந்திப்பதற்கு முன்னதாக,செய்தியாளர்களிடம் பேசிய ஆப்கன் பாதுகாப்பு ஆலோசகரான மொஹிப், பாகிஸ்தான் ஒரு விபசார விடுதி' என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே மொஹிப் - நவாஸ் செரீப் சந்திப்பு பாகிஸ்தான் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களின் சந்திப்பிற்கு பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள், நவாஸ் ஷெரீபுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.