ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல'ல - பாகிஸ்தானுக்கு போங்க !! மிரட்டல் தொனியில் அம்பாசமுத்திர அம்பானி நடிகை!!
நாட்டின் மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் வடமாநிலங்களில் இந்துத்துவ குறித்து பேசி வருவது இடம் பெற்று கொண்டே இருக்கின்றது.
மத அரசியல்
வடஇந்தியாவில் எப்போதும் மத அரசியல் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அதனை வைத்து தான் பாஜக கட்சியை பெருமளவு வளர்த்து கொண்டது என்றும் கூறுபவர்களும் உள்ளார்கள்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் வரும் மத அரசியல் பேசப்படாத நிலையில், இங்கே தேர்தல் முடிந்தவுடன் வடமாநிலங்களில் இந்து - முஸ்லீம் போன்ற பேச்சுக்கள் அதிகளவில் பிரச்சாரங்களில்தென்படுகின்றன . அதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தும் வருகின்றன.
சொல்ல மறுத்தால்
தமிழில் அம்பாசமுத்திர அம்பானி படத்தில் நடிகை நவநீத் ராணா பேசியுள்ள கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி கடும் எதிர்ப்புகளை பெற்று வருகின்றது.
அவர் தேர்தல் பரப்புரையில் பேசும் போது, ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்தால், பாகிஸ்தான் செல்லுங்கள், இது ஹிந்துஸ்தான் என அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
நவநீத் ராணா இந்த தேர்தலில், பாஜக கட்சி சார்பில் வேட்பாளராக மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.