சாலை விபத்தில் ஒருவர் பலி... முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை.. ரசிகர்கள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan May 19, 2022 03:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

சாலை விபத்து ஏற்படுத்திய வழக்கில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு ஹரியானா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

சாலை விபத்தில் ஒருவர் பலி... முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை.. ரசிகர்கள் அதிர்ச்சி | Navjot Singh Sidhu To One Year In Jail In Accident

இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து சித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கிட்டதட்ட 34 ஆண்டுகளாக இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். 

அந்த தீர்ப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.