முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை - உச்சநீதிமன்றம் அதிரடி

Indian National Congress
By Swetha Subash May 19, 2022 11:09 AM GMT
Report

முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988-ம் ஆண்டு பாட்டியாலா பகுதியில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை - உச்சநீதிமன்றம் அதிரடி | Navjot Singh Sidhu Gets One Year Jail Imprisonment

இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர் 34 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ரம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை - உச்சநீதிமன்றம் அதிரடி | Navjot Singh Sidhu Gets One Year Jail Imprisonment

அதன்படி இந்த விசாரணையின் முடிவில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை விதித்து உச்ச நீதிமன்ரம் அதிரடியாக உத்தரவிட்டது இந்த உத்தரவை அடுத்து சித்து விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும், தீர்ப்பு குறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து சட்டத்திற்குட்பட்டு நடப்பேன் என தெரிவித்தார்.