என்ன சண்டை செய்யலாமா ? - விராட் கோலி - நவீன் உல் ஹக் வாக்குவாதம் : வைரல் வீடியோ

Virat Kohli Viral Video
By Irumporai May 02, 2023 03:10 AM GMT
Report

நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது விராட்கோலிக்கும் நவீன் உல் ஹக் வாக்குவாதமான சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. 

ஐபிஎல் போட்டி

நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.   

என்ன சண்டை செய்யலாமா ? - விராட் கோலி - நவீன் உல் ஹக் வாக்குவாதம் : வைரல் வீடியோ | Naveen Ul Haq And Virat Kohli

விராட் கோலி வாக்குவாதம்

இந்த போட்டியின் போது, லக்னோ பேட்டிங் செய்தபோது 17வது ஓவரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோலியும், நவீனும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நடுவர் பிரச்சினையை சமரசம் செய்துவைத்தார். பின்னர், லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலும், பெங்களூரு வீரர் கோலியும் சந்தித்து பேசினர்.

அப்போது, கோலியுடன் பேச நவீன் உல் ஹக்கை அழைத்த கேஎல் ராகுல் அழைத்தார். ஆனால், ராகுல் அழைப்பை ஏற்க மறுத்த நவீன் கோலியுடன் பேசாமலேயே சென்றுவிட்டார். நவீன் உல் ஹக் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.