வாரணம் ஆயிரம் ஸ்டைல்ல வெளியானது .. கிட்டார் கம்பி மேல பாடல்!

suriya menongautham GuitarKambiMeleNindru
By Irumporai Jul 12, 2021 05:20 PM GMT
Report

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் நவரசா என்ற வெப்தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.

இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களில், கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று.

இந்நிலையில், இந்த குறும்படத்தின் தூரிகா பாடலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை கார்த்திக் இசையமைத்து பாடியுள்ளார்.

[

மதன் கார்க்கி இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். நவரசா வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த தூரிகா பாடல் இணையவாசிகளால் மிகவும் ரசிக்கபட்டு வருகிறது