கொஞ்சம் நேரம் நீ ரயிலை இயக்கு... ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்....

Japan Bullet train Nature calling
By Petchi Avudaiappan May 23, 2021 04:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜப்பானில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புல்லட் ரயிலை விட்டு விட்டு கழிப்பறைக்கு சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பானில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் குறிப்பிட்ட நேரம் தாண்டி இலக்கை அடைந்தால் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது வழக்கம்

இதனிடையே கடந்த மே 16 ஆம் தேதி டோக்கியோ நகரத்தில் இருந்து ஒசாகாவிற்கு சென்ற ஹிகாரி 633 என்ற புல்லட் ரயில் ஒன்று இலக்கை வந்தடையும் நேரத்திற்கு பதிலாக ஒரு நிமிடம் தாமதமாக வந்தது.

அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில் தாமதத்திற்கான காரணம் குறித்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அதில் ரயிலை இயக்கிய ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக ரயில் இயங்கிக்கொண்டிருந்த போதே சில நிமிடங்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும், அந்த நேரத்தில் ரயிலை இயக்க உரிமம் இல்லாத நடத்துனர் இயக்கியதும் தெரியவந்தது.

60 பயணிகளை ஏற்றிக்கொண்டு 150 கிமீ வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.