Hair Pack: முடி அடர்த்தியாக வளர எளிதான ஹேர் பேக்.. வீட்டிலே செய்வது எப்படி ?

Hair Growth Life Style
By Sakthi Raj Feb 04, 2026 09:49 AM GMT
Report

முடியை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சமயங்களில் பொடுகு தொல்லை, முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நாம் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படியாக முடியை பராமரிப்பதற்கு பலரும் பல வழிகளை பின்பற்றுகிறார்கள்.

அதில் வீடுகளிலே முடியை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

முடியை பராமரிப்பதற்கு வீடுகளிலே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான ஹேர் பேக் செய்யலாம். அதற்கு ஒரு கைப்பிடி துளசி இலை, இரண்டு ஸ்பூன் மிளகு எடுத்துக்கொண்டு அதை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சேர்த்து சிறிது காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹோட்டல்களில் உணவிற்கு பிறகு பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன் தெரியுமா?

ஹோட்டல்களில் உணவிற்கு பிறகு பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன் தெரியுமா?

Hair Pack: முடி அடர்த்தியாக வளர எளிதான ஹேர் பேக்.. வீட்டிலே செய்வது எப்படி ? | Natural Home Remedies For Healthy Hair Growth

பிறகு அதை தலையில் தடவி வந்தால் முடி ஆரோக்கியமாக இருப்பதோடு வறண்டு கூந்தலும் மிருதுவாக மாறும். பொடுகு பிரச்சனையால் நீண்ட நாட்கள் அவதிப்படுபவர்கள் பசும்பாலில் கசகசா பொடி மற்றும் முடி அதிமதுர பொடியுடன் கலந்து தலையில் 5 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால் முடி கொட்டுதல் மற்றும் பித்த நரை பிரச்சனை,மற்றும் பொடுகு தொல்லை விலகும்.

இளநரை பிரச்சனை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயில் சிறிது கருவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து அதை தலையில் தடவி வந்தால் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். அதே போல் மிருதுவான முடிக்கு செம்பருத்தி இலை, துளசி இலை மற்றும் நறுக்கிய புங்க காய்தோல்கள்சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி வந்தாலும் ஒரு நல்ல மாற்றம் உண்டு.

உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்

உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்

Hair Pack: முடி அடர்த்தியாக வளர எளிதான ஹேர் பேக்.. வீட்டிலே செய்வது எப்படி ? | Natural Home Remedies For Healthy Hair Growth

சிறு குழந்தைகளுக்கு பேன் தொல்லை அடிக்கடி வருவதை நாம் காணலாம். அவர்கள் துளசி சாறு மற்றும் சம அளவில் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு நன்றாக தலையை அலசினால் பேன், பொடுகு பிரச்சனை முற்றிலுமாக விலகும்.

அடர்த்தியான மற்றும் நல்ல ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்பதற்கு கொழுந்து வேப்பிலை மற்றும் துளசி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தேய்த்து வந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடி நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும், நம் தலைக்கு குளித்த பிறகு மிகவும் கடினமான துண்டு, அதிக சூடு அதிகமாக துவட்டுதல் போன்ற விஷயங்கள் பயன்படுத்துவது நம் தலைமுடியை பாதிக்ககூடும். அதனால் அதை தவிர்ப்பதும் முடி நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.