‘’ அடேய் யார் பார்த்த வேலை டா இது ‘’ - வைரலாகும் நாட்டு நாட்டு பாடலின் காமெடி வெர்ஷன்

viral nattunattusong comedyvideo
By Irumporai Jan 07, 2022 02:04 PM GMT
Report

பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.,’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது.

அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்துள்ளர்.குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற நாட் நாட் பாடல் சினிமாரசிகர்களிடையே  மிகுந்த வரவேற்பை பெற்றது.

 அந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரணும் ஆடிய ஆட்டம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஈர்த்த நிலையில் அதே பாடலின் பின்னணியில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.