ஒருவருக்கு கொரோனா - ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்
நியூசிலாந்து நாட்டின் பொதுமக்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் போராடி அதனை கட்டுப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வந்தது இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
இதனிடையே ஆக்லாந்தில் 58 வயது நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்லாந்து மட்டுமின்றி நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு என அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா அறிவித்துள்ளார்.
லட்சக்கணக்கில் பாதிப்புள்ள நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒருவருக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.