நாடு தழுவிய போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்... வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்!

By Vinoja Jan 27, 2026 06:28 AM GMT
Report

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி லட்சக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், தொடர்ந்து 4-வது நாளாக இன்று வங்கிச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டுறவு உள்ளிட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளை தவிர, மாதந்தோறும் 2-ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நாடு தழுவிய போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்... வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்! | Nationwide Bank Strike Today On 27 January

இந்நிலையில், வாரம் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து வங்கி ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வங்கிச் சேவைகள் முடக்கம்

இது குறித்து வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தமையால்,  திட்டமிட்டபடி இன்று நாடு தழுவிய ரீதியில்  வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பணி நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளன.

ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை அளிக்கப்பட்டு,3 நாள் வங்கிகள் விடுமுறையாக இருந்த நிலையில், 4-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஏ.டி.எம் சேவைகள், காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி வங்கிச் சேவைகள் முற்றிலும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.