2-வது நாளாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்..!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மார்ச் 28,29 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் செய்ய மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்து நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது, முறைசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும்,
நான்கு சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று நடந்த போராட்டத்தில் தமிழகத்தில் குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்பட்டன.
இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்று தொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்திருந்தார்.இன்று காலை சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.