அண்ணாமலை இல்லை கூட்டணி பற்றி தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் : இபிஎஸ் பதில்
கூட்டணி குறித்த உயர்மட்ட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். மேலும் , மத்தியில் இருப்பவர்கள் தான் கூட்டணியை உறுதி செய்வார்கள், மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி உறுதி, இறுதி என இப்போதே கூற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இபிஎஸ் விளக்கம்
இதற்கு தற்போது கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே விருப்பம் தெரிவித்ததாக கூறிய இபிஎஸ் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே எங்களிடம் சொல்லிவிட்டனர் எனக் கூறினார்.