பிரதமர் கோரிக்கையினை நிறைவேற்றிய ரஜினி : என்ன செய்தார் தெரியுமா?
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
மோடி கோரிக்கை
நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததார் .
அதன் அடிப்படையில் பொது மக்களும் விளையாட்டு மற்றும் நடிகர்களும் பலரும் தேசிய கொடியை தங்கள் வீட்டு வைத்து வருகின்றனர்.
கொடி ஏற்றி வைத்த ரஜினி
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுக வலைதளங்களில் முகப்புகளில் தேசிய கொடியை வைக்க வேண்டும்மென மோடியின் வேண்டுகோளின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் முகப்பில் தேசிய கொடியின் புகைப்படத்தை வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை வைத்துள்ளார்.