அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என கூறிய மகன் - காதலன் மூலம் பெற்ற மகனின் கழுத்தை அறுத்து வீசிய கொடூர தாய்
நத்தம் அருகே தனது தாய் வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகுவதை தந்தையிடம் சொல்லப் போவதாக கூறிய மகனை, பெற்ற தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்து குளத்தில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் கிராமத்தில் வசித்துவந்த துர்காவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கோபாலுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவரது மகனோ, தாத்தா கோவிந்தசாமியின் வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார்.
கணவர் வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கும் நிலையில் கோபாலுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ள உறவாகமாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதை துர்காவின் மகன் பார்த்துவிட்டதால் அதிர்ச்சியாகி இருக்கிறார்.
இதை நான் அப்பாவிடம் சொல்லாமல் விடமாட்டேன். அப்பாவிடம் சொல்லப் போகிறான் என்று மகன் கூற ஆத்திரத்தில் தாய் மகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன் படி காதலனுடன் சேர்ந்து மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து கோயில் குளத்தில் சடலத்தை வீசியுள்ளார். கடந்த 11-ஆம் தேதி அழுகிய நிலையில் குளத்தில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோபாலுடன் ஏற்பட்ட கள்ள உறவை கணவனிடம் சொல்லிவிடுவானோ என்ற பயத்தால் கொலை செய்து வீசினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார், இதனை தொடர்ந்து தாய் துர்கா, கள்ளக்காதலன் கோபால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.