அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி Visiting பந்துவீச்சாளராக சாதனை படைத்த நாதன் லயன்...!

Cricket Australia Cricket Team Nathan Lyon
By Nandhini Mar 01, 2023 10:28 AM GMT
Report

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி Visiting பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சாதனைப் படைத்துள்ளார்.

சுருண்டு விழுந்த இந்தியா - 

வெற்றி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் ரோகித் சர்மா, சுக்மன் கில், புஜாரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். இதன் பிறகு களத்தில் இறங்கிய விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் 22 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்களிலும், உமேஷ் யாதவ் 17 ரன்களிலும், முகமது சிராஜ் (0) ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்து ஆல் ஆவுட்டானது.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

nathan-lyon-breaks-incredible-asian-record

முதலிடம் பிடித்து நேதன் லயன் சாதனை

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இன்று நம்பமுடியாத சாதனையைப் பதிவு செய்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கணிசமான அளவில் உதவிய ஒரு ஆடுகளத்தில், முதல் ஒரு மணி நேரத்திலேயே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய பேட்டர்கள் சீட்டுக்கட்டு போல் விழுந்தனர். 5 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றில் 2 நாதன் லயன் வசமாகி, ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை ஆட்டமிழக்கச் செய்த தருணத்தில், அவர் வரலாற்றுப் புத்தகங்களில் தன்னைப் பதித்துக்கொண்டார்.

ஆசிய நாடுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய Visiting பந்துவீச்சாளர் பட்யலில் ஷேன் வார்னேவை பின்னுக்குத்தள்ளி நாதன் லயன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். லயன் - 128* முலிடத்திலும், வார்னே - 127 இரண்டாவது இடத்திலும், வெட்டோரி - 98 மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.