“கனவு நிஜமானது, கடவுளுக்கு நன்றி” - அப்படி என்ன நடந்தது? வைரலாகும் நடராஜனின் ட்வீட்

natarajan t srh team player frm tn sets up new cricket ground at his native
By Thahir Dec 15, 2021 01:34 PM GMT
Report

தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் தனது சொந்த கிராமத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் திறந்திருப்பதாக தன் டிவீட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி தமிழக வீரரான நடராஜன் இந்திய அளவில் பிரபலமானார்.

சேலத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் அறிமுகமாகி தன் முழு திறமையை காட்டி அபாரமாக ஆடினார்.

அதோடு, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நெட் பவுலராக இந்திய அணியில் இடம்பெற்றார்.

இந்நிலையில், நடராஜன் தன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை திறந்திருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், 'அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானத்தை என்னுடைய சொந்த கிராமத்தில் திறப்பது பற்றிய செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த மைதானத்திற்கு ‘நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட்’ என பெயரிட்டுள்ளோம்.

கனவுகள் நிஜமாகிறது. இதே மாதம் கடந்த ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானேன். இந்த ஆண்டு கிரிக்கெட் மைதானத்தை நிறுவி இருக்கின்றேன்' என பதிவிட்டிருந்தார்.

தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய சையத் முஷ்தாக் அலி டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நடராஜன் இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.