நடராஜனின் பந்துவீச்சில் இரண்டாக உடைந்த ஸ்டெம்ப் - வைரல் வீடியோ உள்ளே

OrangeArmy ipl2022 sunrisershydrabad TATAIPL ReadyToRise natarajanjayaprakash
By Petchi Avudaiappan Mar 21, 2022 05:25 AM GMT
Report

ஐபிஎல் தொடருக்காக தமிழக வீரர் நடராஜன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அதேசமயம் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ள தமிழக வீரர் நடராஜன் பந்துவீசி பயிற்சி எடுக்க்கும் வீடியோவை அணி நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில் விக்ரம் நடித்த மகான் படத்தின் பின்னணி இசை ஒலிக்க நடராஜன் வீசும் பந்தில் ஸ்டெம்ப் உடைந்து போகிறது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.