இந்தியா வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்தியா வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன். இடது கை பந்து வீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக, நெட் பவுலராக சென்று, அதன்பின் இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி முத்திரை பதித்தார்.
இங்கிலாந்து தொடரின்போது காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி நேரத்தில் அணியில் இணைந்தார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இன்று நடராஜன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று, நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. மேலும் காயத்தில் இருந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ க்கும் எந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்."
இவ்வாறு நடராஜன் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.