தமிழக அணியிலிருந்து நடராஜனை நீக்குங்கள்: பிசிசிஐ-யின் கோரிக்கை ஏற்பு

india cricket odi
By Jon Feb 11, 2021 02:22 PM GMT
Report

பிசிசிஐயின் கோரிக்கைக்கு ஏற்ப விஜய் ஹசாரோ கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். தமிழக வீரரான நடராஜன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பணியாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது நடைபெறும் இங்கிலாந்து தொடரில் நடராஜன் இடம்பெறாததால், விஜய் ஹசாரோ தொடருக்கான தமிழக அணியில் இடம்பெற்றார்.

பிப்ரவரி 20 முதல் மார்ச் 14 வரை நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி பங்கேற்கிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் நடராஜன் நிச்சயம் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. எனவே தமிழக அணி சார்பாக விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாட நேர்ந்தால் அவர் சோர்வடையவும், காயத்தில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்படும், எனவே இங்கிலாந்து தொடரை கருத்தில் கொண்டு விஜய் ஹசாரே தொடரிலிருந்து நடராஜனை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. பிசிசிஐ-யின் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு விஜய் ஹசாரே தொடரிலிருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று நடராஜன் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.