பிசிசிஐ வெளியிட்ட வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் இடம்பெறாத காரணம் என்ன?
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் இடம்பெறாததற்கான காரணத்தை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா வீரர்களின் ஒப்பந்த பட்டியலை ஆண்டுதோறும் இந்தியா கிரிக்கெட் வாரியம் வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் ஆண்டு முதல் செப்டம்பர் 2021 வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியா வீரர்கள் ஏ+,ஏ,பி மற்றும் சி என வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் முறையே 7 கோடி,5 கோடி ,3 கோடி மற்றும் 1 கோடி விதம் ஊதியம் வழங்கப்படும்.அதன்படி ஏ+ பிரிவில் விராட் கோலி,ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மற்ற வீரர்கள் அனைவரும் முறையே அடுத்தடுத்த பிரிவுகளில் தற்போது இந்தியா அணியில் விளையாடி வரும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த பட்டியலில் நடராஜன் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அது குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது,
இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.
அதுவும் இல்லை என்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இதனால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil