'’ யார்க்கர் பந்துவீசவே முயற்சிப்பேன்’’ - களைக்கட்டும் IPL .. நடராஜன் சொல்வது என்ன?

IPL2021 SunRisers Hyderabad OrangeOrNothing OrangeArmy
By Irumporai Sep 18, 2021 10:40 AM GMT
Report

கொரோனா பரவல் காரணமகா பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, நாளை (செப்டம்பா் 19) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இந்த நிலையில் 5 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியிருப்பது பெருமகிழ்ச்சி என்று தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அமீரகம் சென்றுள்ள நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஐ.பி.எல் போட்டியில் களம் கண்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடராஜன்.

காயத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு வாரத்திலேயே களத்தில் இறங்கவுள்ளது சவாலானதாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மீண்டும் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், அணியின் வெற்றிக்கு உதவுவதோடு, யார்க்கர் பந்துவீசவே முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார்.