கோமாவில் இருந்த மகன்; விஜய்யால் தான் குணமானார் - நடிகர் நாசர் நெகிழ்ச்சி
கோமாவில் இருந்த தனது மகன் விஜய்யால் தான் குணமடைந்தார் என நடிகர் நாசர் தெரிவித்துளள்ளார்.
நாசர் மகன்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் நாசர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மூத்த மகன் ஃபைசல் தீவிர காயமடைந்து 14 நாட்கள் கோமாவில் இருந்தார். தனது மகன் கோமாவில் இருந்து மீண்டு குணமைடந்ததற்கு விஜய் தான் கரணம் என பேட்டி ஒன்றில் நடிகர் நாசர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
விஜய்
இதில் பேசிய அவர், என் மூத்த மகன் தீவிர விஜய் ரசிகன். ஒருமுறை என் மகனுக்கு விபத்து ஏற்பட்டு, 14 நாட்கள் சுயநினைவை இழந்துவிட்டார். கோமாவில் இருந்து மீண்டதும் அவன் அம்மா , அப்பா என்று சொல்லவில்லை. அவன் சொன்ன முதல் வார்த்தை விஜய்.
அவனுக்கு விஜய் என்று ஒரு நண்பன் உள்ளதால் அவனை தான் கேட்கிறான் என்று நினைத்து அவனது நண்பன் விஜய்க்கு ஃபோன் செய்து வரவழைத்தோம். அப்போது அவன் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. என் மனைவி விஜயின் புகைப்படத்தை காட்டியதை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.
அதன் பின்னர் அடிக்கடி விஜய் படங்கள், விஜய் பாடல்கள், விஜய் பேசிய பேச்சுகள் ஆகியவற்றை போட்டுக் காட்டினோம். அதன் பின்னர்தான் முழுமையாக நினைவு திரும்பியது. என் மகனின் நிலை தெரிந்து விஜய் அவன் குணமாகும் வரை பலமுறை வந்து அவனை பார்த்து பேசிவிட்டு சென்றார்" என கூறினார்.