சினிமாவிலிருந்து விலகுகிறார் நாசர்? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் நாசர்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். இவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் இடம்பிடித்தார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நாசர் 1985-ல் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘கல்யாண அகத்திகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் நாசர் நடித்து வருகிறார். பாகுபலியில் நாசரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்திழுத்தது.
கோல்டன் விசா
சமீபத்தில், நடிகர் நாசருக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி ஐக்கிய அரவு அமீரகம் கவுரவப்படுத்தியது.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், நடிகர் நாசர், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியிலும் இணைந்து பணியாற்றி வந்தார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
சினிமாத்துறையிலிருந்து விலகல்?
இந்நிலையில், நடிப்பிலிருந்து விலக நாசர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் இதய பாதிப்புகளால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு நாசர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியைக் கேட்ட திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார்கள்.
அதே சமயம் நாசரின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்று பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி கௌரவித்த துபாய் அரசு - குவியும் வாழ்த்து