‘இனி விராட் கோலி அவ்வளவு தான்’ - கிண்டல் செய்யும் முன்னாள் இங்கிலாந்து வீரர்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கில் என்ன பிரச்சனை என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த தொடரில் தனது விக்கெட்டுகளை ஸ்லிப்பிலேயே கொடுத்து அவுட்டாகி உண்மையில் கிரிக்கெட் விளையாடுவதையே மறந்தவர் போல் ஆடி வருகிறார்.
இதனிடையே இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தான் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், எந்த பந்துகளை தவிர்க்க வேண்டுமோ அந்த பந்துகளில் எல்லாம் கோலி விளையாடுகிறார் என்றும், ஆண்டர்சன் மற்றும் ராபின்சனின் பந்துகளை விளையாடுவதா அல்லது விடுவதா என்று அவருக்கே தெரியாமல் முழிக்கிறார் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன் ஸ்விங் பந்துகள் வரும் போது, அவருக்கு சுத்தமாக என்ன செய்வதென்றே தெரியவில்லை. தரமான பவுலிங்கை கொண்ட இங்கிலாந்து அணியை வரும் போட்டிகளிலும் அவர் சமாளிப்பது கடினமே எனவும் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.