சூரியனில் மிகப்பெரிய ஓட்டை - அடுத்து நடக்கப்போகும் பேராபத்து : அச்சத்தில் உலக நாடுகள் ...

United States of America NASA World
By Anbu Selvam Mar 31, 2023 05:11 AM GMT
Anbu Selvam

Anbu Selvam

in உலகம்
Report

 சூரியனின் தென் துருவப் பகுதியில் புவிகாந்த புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக நாசா எச்சரிகை விடுத்துள்ளது .

கரோனா ஓட்டை 

நாசாவின்  ஆராய்ச்சி பிரிவுகளில் ஓன்று சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் . இது சூரியனின் அமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறது .

சூரியனில் மிகப்பெரிய ஓட்டை - அடுத்து நடக்கப்போகும் பேராபத்து : அச்சத்தில் உலக நாடுகள் ... | Nasa Warns Of The Largest Solar Flare

இந்த ஆய்வின் இறுதியில் அதிர்ச்சிகரமான எச்சரிக்கை ஒன்றினை நாசா வெளியிட்டுள்ளது. பூமியை விட 20வது மடங்கு பெரிய அளவில் கருமையான பகுதி ஓன்று சூரியனில் காணப்படுவதாக நாசா கண்டறிந்துள்ளது. 

இந்த பகுதிக்கு கரோனா  ஓட்டை என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர் . இந்த கரோனா ஓட்டை சூரியனின் தென் துருவ பகுதிக்கு அருகே உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

எச்சரிகை

கரோனா ஓட்டை விளைவாக ,புவிகாந்த புயல் மற்றும் சூரிய காற்று ஏற்படலாம் என அமெரிக்காவின்                என் .ஓ .ஏ .ஏ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . இந்த ஓட்டையின் மூலம் வெளிப்படும் சூரிய காற்றானது மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது .

சூரியனில் மிகப்பெரிய ஓட்டை - அடுத்து நடக்கப்போகும் பேராபத்து : அச்சத்தில் உலக நாடுகள் ... | Nasa Warns Of The Largest Solar Flare

இது குறித்து மேலை நாட்டு வல்லுநர்கள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. சூரியனில் இருந்து வெளிப்படும் சக்திவாய்ந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கரோனா ஓட்டையானது 3 லட்சம் கிலோ மீட்டர் முதல் 4 லட்சம் கிலோ மீட்டர் சுற்றளவுடன் பரந்து விரிந்துள்ளது . இது பூமியை விட  பல மடங்கு அளவில் பெரியதாக உள்ளது என நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த ஆய்வாளர் அலெக்ஸ் யங் கூறியுள்ளார் . இந்த எச்சரிக்கை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .