தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் - ஸ்கெட்ச் போட்ட நாசா!
தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல்லை ஆய்வு செய்ய நாசா முயற்சி செய்து வருகிறது.
16 சைக் விண்கல்
'16 சைக்' என்ற விண்கல்லில் தங்கமும், பிளாட்டினமும் இருப்பதாக கூறப்படு்கிறது. இது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் இருக்கிறது.
இதை ஆய்வு செய்ய நாசா சார்பில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. தற்போது இது 2 கோடி கி.மீ-ஐ கடந்துள்ளது. விரைவில் செவ்வாய் கிரகத்தை நெருங்கி, பின்னர் அங்கிருந்து '16 சைக்' விண்கல்லை நோக்கி பயணிக்கும். இந்த விண்கல்லில் உள்ள அரிய உலோகங்களின் மதிப்பு மிக மிக அதிகம்.
நாசா முயற்சி
இதன் மொத்த மதிப்பு $100,000 குவாட்ரில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதை முதலில் ஆய்வு செய்து, பின்னர் அங்கிருந்து அந்த உலோகங்களை வெட்டி எடுக்க முயற்சிக்க வேண்டும்.
ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் இந்த விண்கல் 1852ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் அங்கு விண்கலத்தை கூட அனுப்பமுடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.