Wow... சிரிக்கும் சூரியன்... - புதிய படத்தை வெளியிட்ட நாசா... - பிரமிக்க வைக்கும் வீடியோ வைரல்...!

Sunrise Viral Video NASA
By Nandhini Oct 31, 2022 07:53 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சிரிக்கும் சூரியனின் அழகிய புகைப்படத்தை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சிரிக்கும் சூரியன் - நாசா வெளியிட்ட வீடியோ

நாசா தன் டுவிட்டர் பக்கத்தில் சிரிக்கும் சூரியனின் புகைப்படம், வீடியோவோடு ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், இன்று மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்த வீடியோவில், சூரியன் சிரிப்பது போன்று உள்ளது; கருப்பு நிறத்தில் உள்ள படிவங்கள், தற்காலிகமாக ஏற்படும் ஓட்டைகள். அங்கு மற்ற பகுதியை விட அடர்வு குறைவானதாக இருக்கிறது.

சோலார் டைனமிக் அப்சர்வேட்டரியிலிருந்து இறுதியில் சிரிக்கும் சூரியனைக் காட்டுகிறது. விண்வெளி வானிலையின் கடந்த வாரத்தில், 3 சூரிய எரிப்புகள், 23 கரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் மற்றும் புவி காந்த புயல்கள் எதுவும் இல்லை என்று பதிவிட்டுள்ளது.       

nasa-solar-dynamics-observatory-sun-smile-video