விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்த பூனை; 19 மில்லியன் மைல் தூரம் - NASA வரலாற்று சாதனை!
லேசர் மூலம் முதன்முறையாக 15 விநாடிகள் கொண்ட பூனையின் வீடியோ விண்கலத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பூனை வீடியோ
வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையே உள்ள 'சைக்' என்ற சிறுகோளை ஆய்வு செய்ய Psych என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா (NASA) விண்ணுக்கு அனுப்பியது.
இந்த விண்கலம் தற்போது பூமியிலிருந்து 19 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் முதன்முறையாக லேசர் மூலம் 15 விநாடிகள் கொண்ட பூனையின் வீடியோ விண்கலத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளியின் ஆழமான பகுதியிலிருந்தும் அதிக தரத்துடன் கூடிய வீடியோவை பூமிக்கு அனுப்ப முடியும் என்பதை நாசா நிரூபித்துள்ளது.
நாசா சாதனை
மேலும், இதன் மூலம் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையும் விண்வெளித்துறையில் நாசா படைத்துள்ளது. இந்த Ultra-HD வீடியோ 19 மில்லியன் மைல் தொலைவிலிருந்து சரியாக 101 விநாடிகளில் ஒரு நொடிக்கும் 267 மெகாபிட்ஸ் என்ற வேகத்தில் பூமியை வந்தடைந்துள்ளது.
இந்த வீடியோவை நாசா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. 1920களில் அமெரிக்காவின் ஒளிபரப்பு தொடக்க நிலையில் இருந்தபோது சோதனைக்காக 'பெலிக்ஸ்' பூனையின் சிலை ஒளிபரப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே விண்வெளியிலிருந்து தற்போது அனுப்பப்பட்ட வீடியோவிலும் இந்த பூனை காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.