ஆளின்றி திரும்பும் ஸ்டார்லைனர்; சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது எப்போது? நாசா முக்கிய அறிவிப்பு

NASA SpaceX Sunita Williams International Space Station
By Karthikraja Aug 25, 2024 07:11 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது தொடர்பான அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். 

sunita williams

இந்நிலையில் 3 வது முறையாக, கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையம் சென்றனர். 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். 

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

நாசா

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 நாட்கள் விண்வெளி மையத்திலே தங்கி உள்ளனர். 

spacex crew dragon

இந்நிலையில், இவர்கள் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. மேலும், இவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் ஆளின்றி பூமிக்கு திரும்புவதாகவும், இவர்கள் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்கிறார்கள்.