2 கி.மீ உயரம் கொண்ட அதிசய 'Dust Devil' நிகழ்வு - துல்லியமாக வீடியோ எடுத்த ரோவர்!
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் நடந்த ஒரு ஆச்சரிய நிகழ்வை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளது.
பெர்சிவரன்ஸ் ரோவர்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 2020ம் ஆண்டு 'பெர்சிவரன்ஸ்' என்ற ரோவரை அனுப்பியது.
தொடர்ந்து 2 ஆண்டுகள் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை செய்து வருகிறது. தற்போது ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள 'ஜெஸெரோ' என்ற பள்ளத்தை ஆய்வு செய்யும் போது ஒரு ஆச்சரியமான வானிலை நிகழ்வை படம் பிடித்துள்ளது. அது ஒரு Dust devil (அதாவது பேய் புயல்) நிகழ்வு.
பேய் புயல்
இந்த பேய் புயலானது கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ரோவர் இருந்த இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் 'தோரோஃபேர் ரிட்ஜ்' என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளது.
Mars dust devil caught in action! This video, which is sped up 20 times, was captured by one of my navigation cameras. ? More on what my team is learning: https://t.co/PhaOYOTrFH pic.twitter.com/vRaAVszcm5
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) September 29, 2023
இதன் அகலம் சுமார் 60 மீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் 118 மீட்டர் மட்டுமே நம்மால் பார்க்க முடியும், ஆனால் அது வீசும் நிழலின் அடிப்படையில், விஞ்ஞானிகள் சுமார் 2 கிலோமீட்டர் உயரம் இருப்பதாக மதிப்பிடுகின்றனர்.
இது மணிக்கு சுமார் 19 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதை துல்லியமாக நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் படம்பிடித்துள்ளது.
அங்குள்ள ரோவர் கேமராக்கள் மூலம் 4 வினாடிகள் இடைவெளியில் 21 பிரேம்களால் வீடியோவை ரோவர் எடுத்துள்ளது. அதை சுமார் 20 மடங்கு வேகப்படுத்தி வீடியோவை வெளியிட்டுள்ளது நாசா.