ஒரு வேளை தானோஸ் கையா இருக்குமோ? - சிலிர்க்க வைக்கும் நாசா புகைப்படம்

viral nasa Hand of God
By Irumporai Sep 28, 2021 12:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நாசா விண்வெளியின் அதிசயங்களை நாசா அவ்வப்போது புகைப்படமாக அனுப்பி வைக்கும் அப்படி தற்போது ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

விண்வெளியின் ஆழமான இருள் பின்னணியில் கை போன்ற ஒரு வடிவம் பொன்னிறத்தில் தெரிய அதைஅப்படியே புகைப்படமாக்கி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது நாசா. இந்த வடிவம் ஆற்றலும் நுண் துகள்களும் அடங்கிய நெபுலா என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒரு நட்சத்திரம் வெடித்து உருவாகையில் அதனால் விட்டுச் செல்லப்படும் பல்சாரிலிருந்து புறப்படுவதுதான் இப்படிப்பட்ட வடிவங்கள். இந்த பல்சார் 19கிமீ சுற்றுப்பரப்பு கொண்டது. இதன் அதிசயம் என்னவெனில் இந்தப் பல்சார் தன்னைத்தானே விநாடிக்கு 7 முறை சுற்றுகிறது.

இது பூமியிலிருந்து 17,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த கடவுளின் பொற்கையை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் சந்தோஷமடைந்தனர். ஹேண்ட் ஆஃப் மிடாஸ் என்கின்றனர்.

இன்னொரு நெட்டிசன் இது சிவனின் 3வது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பு , அவர் காது வளையம் போட்டிருக்கிறார், அவரது தலையில் கங்கை வீற்றிருக்கிறாள் என்று பதிவிட்டுள்ளனர்.

அதே போல் அவென்ஜர்ஸ் ரசிகர்கள் இது தானோஸ் கை என கிண்டலாக குறிப்பிட்டு வருகின்றனர், அவென்ஜர்ஸ் படத்தில் தங்க கவசம் அணிந்த தானோஸ் பல்வேறு கிரகங்களை அழிப்பதாக கதை களம் இருக்கும். எதுஎப்படியோ நாசாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.