’’நிலாவே வா செல்லாதே வா’’ : இப்போதைக்கு நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லை , நாசா அறிவிப்பு காரணம் என்ன ?

landing nsa humanmonn
By Irumporai Nov 11, 2021 06:31 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது.

இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை

’’நிலாவே வா செல்லாதே வா’’  : இப்போதைக்கு நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லை , நாசா அறிவிப்பு காரணம் என்ன ? | Nasa Pushes Back T Human Moon Landing

ஆனால் . டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். 2024-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்குவதாக ஒப்பந்ததில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளன. எனவே இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.