371 விண்வெளியில்...குப்பையில் மோதி தவிப்பு...பூமிக்கு திரும்பியதும் வீரர் சொன்ன முதல் வார்த்தை..!!
நாசாவின் விண்வெளி வீரர்கள் மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர்.
371 நாட்கள் விண்வெளியில்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐஎஸ்எஸ் அமைப்பில் விண்வெளியில் 6 மாதம் மட்டுமே ஆய்வு செய்வதற்காக நாசாவை சேர்ந்த பிராங்க் ரூபியோ கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளிக்கு ஆரய்ச்சிக்காக அனுப்பப்பட்டார். முதலில் 6 மாதம்தான் இருக்கும் என்று நினைத்து தான் விண்வெளிக்கு சென்ற ரூபியோ ஆனால் அது பின்னர் நீள தொடர்ந்து 1 வருடத்திற்கு மேலாக அவர் விண்வெளியில் தங்கியுள்ளார்.
ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக சென்ற இவர், 371 நாட்களுக்கு மேல் விண்வெளி மையத்தில் தங்கி பிராங்க் ரூபியோ சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் விண்வெளியில் அதிக காலம் இருந்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். ஒரு முழு காலண்டர் ஆண்டை பூமிக்கு வெளியே குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பதிவு செய்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார்.
சொன்ன வார்த்தை
இந்நிலையில் இவர், கடந்த 27-ஆம் நாள், கஜகஸ்தானில் உள்ள Dzhezkazgan என்ற நகருக்கு அருகில் அமைந்துள்ள இறங்கும் தளத்தில் தரையிறங்கினர். நாசாவை சேர்ந்த ரூபியோ மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் தரையிறங்கும் போது குப்பையில் இவர்கள் மோதிய போதும் பத்திரமாக தரையிறங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் பூமிக்கு திரும்பிய பின் அவர் கூறும் போது, இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருக்கவேண்டும் என்று முன்னரே தெரிந்திருந்தால் தான் சென்றிருக்கவே மாட்டேன் என கூறி, பூமிக்கு திரும்பிய பின் புவிஈர்ப்பு சக்தியை உணர்வது புதுவித அனுபவமாக உள்ளது என தெரிவித்தார்.