Wow... விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா - அபூர்வ வீடியோ...!
விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றி நாசா வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் வெப்
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது.
இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மிதக்கும் நட்சத்திரங்கள்
சமீபத்தில் கண்ணை கவரும் ஒளி ஊடுருவக்கூடிய நட்சத்திரங்களின் புகைப்படங்களை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கைப்பற்றி பூமிக்கு அனுப்பி வைத்தது. இந்த புகைப்படங்களை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
அந்த புகைப்படத்தில், புதிதாக உருவாகும் ஏராளமான மிதக்கும் நட்சத்திரங்கள், அதில் ஒளி ஊடுருவக்கூடிய வாயு மற்றும் தூசிகளின் மத்தியில் பனித்துளிகள் போல் மின்னுகின்றன. இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

விண்வெளியில் கருந்துளையின் ஒளி
இந்நிலையில், புதிய முயற்சியாக நாசா, கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி எதிரொலிகளை ஒலி (சத்தம்) அலைகளாக மாற்றி இருக்கிறது.
உண்மையில் கருந்துளையால் வெளியிடப்பட்ட அலைகளை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே, புதிய சோனிபிகேஷன் முறைகளைப் பயன்படுத்தி, நாம் கேட்கக்கூடிய சிற்றலைகளிலிருந்து ஒலிகளை உருவாக்க முடிந்ததாக நாசா தெரிவித்திருக்கிறது.
இதற்காக நாசா அதன் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்ட வானியல் தரவுகளைப் பயன்படுத்தி இருக்கிறது.
இது குறித்த வீடியோவை நாசா தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கருந்துளையில் இருந்து வெளிப்படும் சத்தத்தை நன்றாக கேட்க முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
