ஏலியன்ஸின் கவனத்தை ஈர்க்க... நிர்வாணப்படத்தை வெளியிட்டது நாசா - வைரலாகும் புகைப்படம்

NASA
By Nandhini May 08, 2022 07:11 AM GMT
Report

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று உண்மையில் ஏலியன்கள் உள்ளனவா? என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்றிய வண்ணம் உள்ளது.மறுபுறம் இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், வேற்றுகிரகவாசிகளை (ஏலியன்களை) ஈர்க்கும் நோக்கில் நாசா விஞ்ஞானிகள் குழு, மனிதனின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியானது. 

பல ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் இருக்கின்றனவா? என்று தொடர் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வேற்றுகிரக வாசிகளின் வடிவங்களை கவர மனிதர்களின் நிர்வாண படத்தைப் பயன்படுத்த நாசாவின் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தது.

அந்த வகையில், 2 மனிதர்களின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளியில் சித்தரிக்கும் வகையில் வெளியிட விஞ்ஞானிகள் முடிவு செய்தது.

முழு நிர்வாணமான புகைப்படம் : இது ‘பீக்கன் இன் தி கேலக்ஸி’ (பிஐடிஜி) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்நிலையில், வேற்று கிரகவாசிகளை ஈர்க்க விண்வெளிக்கு அனுப்ப வேண்டிய மனிதர்களின் நிர்வாண படத்தை நாசா வெளியிட்டுள்ளது. தற்போது, இப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஏலியன்ஸின் கவனத்தை ஈர்க்க... நிர்வாணப்படத்தை வெளியிட்டது நாசா - வைரலாகும் புகைப்படம் | Nasa Extraterrestrial Life